கம்ப்யூட்டர் துறையில் இந்தியர்களின் திறமை யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அதற்கான ஒரு சின்ன உதாரணம் தான், இந்த எபிக் ப்ரௌசெர் (Epic Browser) . பெங்களூரைச் சேர்ந்த Hidden Reflex என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ப்ரௌசெர் இது.
முழுவதுமாக இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு திறம்பட்ட ப்ரௌசெர் இது. மொசில்லா ப்ரௌசெரின் நடைமேடையை (plat form) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இது. முற்றிலுமாக இந்திய வாசனையுடன், இந்தியர்களுக்கான சிறப்பு அம்சங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆண்டி – வைரஸ் ப்ரோக்ராம்கள் மற்றும் டிவி, தலைப்புச்செய்திகள், லைவ் கிரிக்கெட் போன்றவற்றைக் கொண்ட சைடு-பார் (Slide-Bar) இவை இரண்டும் இதன் சிறப்பு அம்சங்கள்.
இதுமட்டுமல்லாது, இலவச வோர்ட் ப்ரோசெசர் (free Word Processor), மை கம்ப்யூட்டர் ப்ரௌசெர் (My Computer Browser), சமூக இணைப்புகளான ஆர்குட், ட்விட்டர், பேஸ் புக் மேலும் பலவற்றை கொண்ட சைடு பார், நமது இணைய தள உபயோகத்தினை மிகவும் எளிதாக்குகிறது. இந்திய மொழிகளில் எழுதுவதற்கும், இந்த ப்ரௌசெர் நமக்கு உதவி செய்யுது.
இன்னும் என்ன தாமதம், எபிக் ப்ரௌசெரை கீழே இருக்கிற லிங்க்’ஐ கிளிக் பண்ணி தகவலிறக்கம் செய்திடுங்கள்.
www.epicbrowser.com
www.epicbrowser.com
Post a Comment