இந்திய ரூபாய்க்கான சின்னத்தை MS WORD'ல் உபயோகிப்பது எப்படி ?



தனது ரூபாய்க்காக தனியாக சின்னத்தைக் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளில் தற்போது இந்தியாவும் தனக்கொரு இடத்தைப் பிடித்துக்கொண்டது.
அதுவும் அந்த சின்னத்தை நம் தமிழர் ஒருவர் வடிவமைத்து இருக்கிறார் என்பது நமக்கு மேலும் பெருமையூட்டும் செய்தியாகும்.
இனி நாம், அந்த ரூபாய்க்கான சின்னத்தை Ms-Word'ல் எப்படி உபயோகிப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

(1) முதலில் ரூபாய்க்கான சின்னத்தை நாம் டவுன்லோட் செய்து கொள்வோம்.
Foradian Techologies என்பவர்களது இலவசமாக தரும் ரூபாய்க்கான எழுத்துருவை நாம் கீழ்க்கண்ட இணைப்பிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Rupee_Foradian.ttf


(2) டவுன்லோட் செய்தபின் அந்த எழுத்துருவை கோப்பி செய்து, கண்ட்ரோல் பேனலில் உள்ள fonts கோப்பில் ஒட்டிக்கொள்ளவும்.விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 உபயோகிப்பவர்கள் C:>windows>Fonts ல் ஒட்டிக்கொள்ளவும்.


(3) தற்போது Ms-Word ஐ திறந்து கொள்ளவும்.


(4) Font type ல் Rupee அல்லது Rupee Foradian என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.(படம் - 1)
FREE photo hosting by Lazypic Image Hosting



(5)இப்பொழுது விசைப்பலகையின் இடது மேல் மூலையில் TAB பட்டனின் மேல் உள்ள Grave accent (~)பட்டனை அழுத்தவும் (படம் -2)
FREE photo hosting by Lazypic Image Hosting


(6) இப்பொழுது புதிய ரூபாய்க்கான சின்னத்தை நீங்கள் உபயோகிக்கலாம்.